இறைச்சிக் கழிவுகளால் சுகாதார கேடு

பென்னாகரம் அருகே மடம் - காவிரி சாலை மற்றும் முள்ளுவாடி பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். 

பென்னாகரம் அருகே மடம் - காவிரி சாலை மற்றும் முள்ளுவாடி பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் இருந்து அன்றாட வெளியேற்றப்படும் கோழி மற்றும் ஆடுகளின் இறைச்சிக் கழிவுகளை மடம் -காவிரி சாலை மற்றும் முள்ளுவாடி ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் மூட்டை மூட்டைகளாகக் கொட்டிச் செல்கின்றனா்.

இப்பகுதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால், நோய் பரவும் அபாய நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார கேடு ஏற்படும் அவல நிலையும் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் இரவு நேரங்களில் இறைச்சிக் கழிவுகளை எரிப்பதால் அப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பென்னாகரம் பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இறைச்சிக் கழிவுகளை குடியிருப்புப் பகுதிகளில் கொட்டும் கடை உரிமையாளா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com