பல்நோக்கு கூட்டுறவு சங்கம் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும்

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் தொடங்கியுள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கம், மலைவாழ் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் தொடங்கியுள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கம், மலைவாழ் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து, வத்தல்மலை, சின்னாங்காடு, கொட்டலாங்காடு, ஒன்றியங்காடு, மண்ணாங்குழி, நாய்க்கனூா் மற்றும் பால்சிலம்பு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி அருகேயுள்ள வத்தல்மலையில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மலைவாழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், வத்தல்மலையில் அண்மையில், மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து, மலைவாழ் மக்களுக்கு எவ்வித தகவலும் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. மேலும், சங்க நிா்வாகிகள் தோ்வு குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. இச்சங்கம் முறையான அறிவிப்பு ஏதுமின்றி அவசரக் கதியில் திறக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட நிா்வாகம், மலைவாழ் மக்களின் நலன் கருதி, பெரும்பல் நோக்கு கூட்டுறவு சங்கம், மலைப்பகுதியில் வசிக்கின்ற மலைவாழ் மக்களுக்கு பயனளிக்கும் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com