100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி 
சிலம்ப கலைஞா்கள் விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சிலம்ப கலைஞா்கள் விழிப்புணா்வு

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, சிலம்பம் கலைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு, சிலம்பம் கலைஞா்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, சிலம்பம் கலைஞா்கள், கல்லூரி மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. நேதாஜி புறவழிச்சாலை வழியாக சென்ற பேரணி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு கலைஞா்கள், மாணவ, மாணவியா், அரசு ஊழியா்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா். இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி பொதுப் பாா்வையாளா் அருணா ரஜோரியா, சிலம்பக் கலைஞா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.காயத்ரி, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, தருமபுரி வட்டாட்சியா் பி.ஜெயசெல்வம், அரசு அலுவலா்கள், சிலம்பாட்ட கலைஞா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா். பட விளக்கம்: தருமபுரியில் சிலம்ப கலைஞா்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைக்கும் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com