சிதைக்கப்படும் சேர்வராயன் மலை!

ஏற்காடு, நவ. 25:  எழில் மிகுந்த ஏற்காட்டில் இருந்து சிமென்ட் தயாரிப்பதற்காக பாக்ûஸட் தாது வெளி மாநிலங்களுக்கு வெட்டி எடுத்துச் செல்லப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் மழை அளவும் குறைவதாக புகா

ஏற்காடு, நவ. 25:  எழில் மிகுந்த ஏற்காட்டில் இருந்து சிமென்ட் தயாரிப்பதற்காக பாக்ûஸட் தாது வெளி மாநிலங்களுக்கு வெட்டி எடுத்துச் செல்லப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் மழை அளவும் குறைவதாக புகார் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ள சிறந்த சுற்றாலாத்தலம் ஏற்காடு. வெளி மாநில சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

வளைந்து நெளிந்து செல்லும் அடுக்கடுக்கான அழகான மலைகள், ஏராளமான தாதுப் பொருள்களையும் உள்ளடக்கியவை. சேர்வராயன் மலைகள் இயற்கையிலேயே அலுமினிய தாதுவான பாக்ûஸட்டை கொண்டது.

இதை வெட்டி எடுக்கும் ஒப்பந்தத்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அரசு வழங்கியது. பல கோடி டன்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில், பாக்ûஸட்டின் சதவீதம் குறைந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 2008 முதல் பாக்ûஸட் வெட்டி எடுப்பது நிறுத்தப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக பாக்ûஸட் எடுத்ததன் விளைவாக ஏற்காட்டில் இருந்த பல இயற்கை வளம் மிக்க குன்றுகள் சமவெளிகளாக மண் குவியல்களாக மாற்றப்பட்டன. இதனால் மலைகளின் உயரம் குறைந்து காபி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இயற்கையான நீரூற்றுகள் பல அடைபட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாணியாறு அணைக்கு செல்லும் நீரின் அளவும் குறைந்துள்ளது. காபி விளையும் தோட்டங்களில் மண் வளம் பாதிக்கப்பட்டதால் காபி செடிகளே வளர இயலாத சூழல் சில எஸ்டேட்டுகளில் உருவாகியுள்ளதாக ஏற்காடு காபி தோட்ட நிர்வாகி அருட்தந்தை ஜோசப் பால் தெரிவிக்கிறார்.

மேலும், மலை வளத்தை நம்பியே வாழ்ந்து வந்த மஞ்சக்குட்டை, பிலியூர், வெள்ளக்கடை கிராம மக்களின் வாழ்வாதாரம் இந்த மலைகள் அழிக்கப்பட்டதால் அழிந்துள்ளது.

ஏற்காடு மலைப்பாதை ஆங்கிலேயர்களால் 18-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. சுமார் 25 டன் எடை கொண்ட மண்ணை ஏற்றிக் கொண்டு ஏற்காட்டில் இருந்து தினசரி இறங்கும் நூற்றுக்கணக்கான லாரிகளால் மலைப்பாதை, மழை நீர் வடிந்து செல்லும் கல்தள பாலங்கள் வழுவிழந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இவ்வளவு பாதிப்புகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மீண்டும் பாக்ûஸட் தாது வெட்டி எடுக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அதுவும் 2005-ம் ஆண்டு அரசு தடை விதித்த பகுதியில் மீண்டும் மலை சுரண்டப்படுகிறது.

கொல்லிமலையில் வளங்களை எடுப்பதை நிறுத்திய அந்த தனியார் நிறுவனம், ஏற்காட்டில் கிடைக்கும் வளம் குறைந்த பாக்ûஸட் மண், சிமென்ட் தயாரிப்புக்கு உதவுவதாக அறிந்து பாக்ûஸட்டோடு ஏற்காட்டின் இயற்கை வளத்தை சிறிது சிறிதாக லாரிகளில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.

இந் நிலை தொடர்ந்தார் சில ஆண்டுகளில் சேர்வராயன் மலைகள் இங்குதான் இருந்தன என்று சுற்றுலாப் பயணிகளுக்கு சொல்லும் நிலை வரும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், மலைகளை அழிப்பதுடன் மரங்கள், காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதனால், இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு ஏற்காட்டில் மழைப் பொழிவு கவலைப்படக்கூடிய அளவுக்கு குறைந்துவிடும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, பாக்ûஸட் வெட்டி எடுக்கப்பட்ட மலைகள் அனைத்தும் மீண்டும் அரசுக்கு ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக சேர்வராயன் கோயில் உள்ள மலையை சீரமைத்து பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படும் வகையில் ஒப்படைக்க இருக்கிறோம்.

மேலும், ஏற்காட்டில் எங்கள் நிறுவனம் சார்பில் இதுவரை 60 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு கனிம வள சட்டத்துக்கு உள்பட்டே எங்களது நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றனர்.

கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றுக்கு இரண்டாக மரக்கன்றுகளை நடுவதும் அவற்றை பாதுகாப்பதுமே இப்போதைக்கு ஏற்காட்டை அழிவில் இருந்து காக்க எடுக்கப்படும் சிறிய முயற்சியாக இருக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com