ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கிய பேரவை ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவரும், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பேரவையின் செயலாளரும், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான சீனி.திருமால்முருகன், வித்யாமந்திர் கல்லூரி முதல்வர் க.அருள், கல்லூரியின் செயலாளர் செங்கோடன், ஆர்.டி.அக்ரோ தர்மலிங்கம், வணிகர் சங்க தலைவர் செங்கோடன், வனிகர் சங்கச் செயலாளர் உமாபதி, அதிமுக ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய குழுத் தலைவர் கிருஷ்ணன், தணிகை கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஆறு அமர்வுகளாக இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஸ்ரீ வித்யா மந்திர் நிறுவனர் வே.சந்திரசேகரன் வெளியிட அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவர் தேவராசு, பல் மருத்துவர் இளையராஜா, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் யுவராஜ், ஆசிரியர் ஆனந்த், கண்ணன், வானவில் சுரேஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பேராசிரியர் தெய்வத்தை 9442311723 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், பேராசிரியர் ராஜாவை 9994740908 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெயர் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பழ. பிரபு வரவேற்றார். சீனி.திருமால்முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com