ராகுல் பதவியேற்பு: காங்கிரஸார் கொண்டாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டதையடுத்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டதையடுத்து, தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், வழக்குரைஞர் மோகன், பாடி நாகராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பி. பள்ளிப்பட்டியில் வேலன் தலைமையிலும், கடத்தூரில் வட்டாரத் தலைவர் விஸ்வநாதன் தலைமையிலும் நடைபெற்ற இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியிலும், மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு கலந்து கொண்டார்.
பெருந்தலைவர் காமராசர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் செயலர் பாடி நாகராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜெ. ராஜாராம் வர்மா, கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கோவி. சிற்றரசு கலந்து கொண்டார். மாநிலப் பொதுக்குழுஉறுப்பினர் ஆர். ராஜவீரப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில்... அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றதை வரவேற்று, கிருஷ்ணகிரியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக சனிக்கிழமை கொண்டாடினர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்தப் பொறுப்பை அவர் சனிக்கிழமை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, கிருஷ்ணகிரியில் நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி புகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த கொண்டாடத்துக்கு நகரத் தலைவர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் தகி, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் ஏகம்பவாணன், அக கிருஷ்ணமூர்த்தி, ஜேசுதுரைராஜ், நாராயணமூர்த்தி, ராமநாதன், சூர்யா கணேஷ், ராகுல் பேரவைத் தலைவர் குட்டி (எ)விஜயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒசூரில்... ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, ஒசூர் காந்தி சிலை அருகே பொதுமக்களுக்கு காங்கிரஸார் இனிப்புகளை வழங்கினர்.
காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவர் முரளிதரன், ஒசூர் நகரத் தலைவர் நீலகண்டன், மாவட்டச் செயலாளர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் சாதிக், வெங்கடேசன், குண்சேகரன், ஆட்டோ பாபு உள்ளிட்டோர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் வட்டாரத் தலைவர் அன்புநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் நகரத் தலைவர் கோபி, அசோக்குமார், தாசப்பா, நாகராஜ், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போச்சம்பள்ளியில்... ராகுல் காந்தி பதவியேற்றதை வரவேற்று, போச்சம்பள்ளி நான்கு வழிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு போச்சம்பள்ளி காங்கிரஸார் இனிப்புகளை வழங்கினர்.
வட்டாரத் தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். நாகராஜ், ஞானமூர்த்தி, தனபால், சத்யசீலன் ஆகியோர் முன்னில வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சுப்பிரமணி, ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரவர்மா, மாவட்ட சேவா தள தலைவர் நாகராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, நகர தலைவர் இன்செப் , மாவட்ட துணை அமைப்பாளர்கள் கோவிந்தசாமி, முத்து, வட்டராத் தலைவர் ராமன், விவசாயப் பிரிவு மாவட்டப் பொருளாளர் பாலாஜி, சந்தாபுரம் கோவிந்தன், டேனியல் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பர்கூர் வட்டார சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நன்றி தெரிவித்தார்.
ஊத்தங்கரையில்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சனிக்கிழமை கொண்டாடிய ஊத்தங்ரை வட்டார நகர காங்கிரஸ் கட்சியினர்.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் எல்.சுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ஜெ.எஸ்.ஆறுமுகம், ஆசிரியர் இராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ். பூபதி,முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் விஜயகுமார், மாநில பொது குழு உறுப்பினர் ஜே.என்.குமரேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக மேல தாளங்கள் முழுங்க ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள காமராசர் திருவுருவ சிலைக்கும்,ராஜிவ் காந்தி திருவுருவ சிலை, இந்திராகாந்தி, அம்பேத்கர்,சிவாஜி ஆகிய திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடி ஊர்வலமாக சென்றனர்.இதில் பாலகிருஷ்ணன்,திருமால், இளையராஜா மற்றும் கிருஷ்ணகிரி,போச்சம்பள்ளி ஒன்றிய நகர கிளைகழக பொருப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஒன்றியகுழு தலைவர் ஜெ.எஸ்.ஆறுமுகம் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com