அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டு சாலையில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கக்கன்ஜி, காமராஜர் சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் தலைவர் பி.ஏ.குமரேசன் தலைமை வகித்தார். கக்கன் உருவப்படத்தை காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் கோவி. சிற்றரசு திறந்துவைத்தார்.
கக்கன், காமராஜ் உருவப் படங்களுக்கு முன்னாள் எம்எல்ஏ பி.அபரஞ்சி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சேவா அறக்கட்டளையினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.ஆர்.சிவலிங்கம், வேடியப்பன், ஏ.வைரன், முருகேசன், பி.டி ஆறுமுகம், அப்பாவுகவுண்டர், பச்சை முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.