மணலால் நிறைந்திருக்கும் தடுப்பணை தூர் வாரப்படுமா?

மணலால் நிறைந்திருக்கும் கெம்பக்கரை தடுப்பணையைத் தூர்வார வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணலால் நிறைந்திருக்கும் கெம்பக்கரை தடுப்பணையைத் தூர்வார வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொட்டமஞ்சி ஊராட்சிக்குள்பட்ட கெம்பக்கரை கிராமத்தில் சின்னாற்றின் கையாறு என்றழைக்கப்படும் காட்டாற்றில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்தைச் சுற்றிலும் உள்ள மலைகளில் இருந்து உருவாகும் இந்த ஆறு, சின்னாற்றில் கலந்து, பிறகு காவிரியில் சங்கமிக்கிறது. மழைக்காலங்களில் நிரம்பி வழியும் இந்த ஆறு, தற்போது முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.
பொன்ராஜ் என்பவரின் நிலத்துக்கு அருகே தடுப்பணை அமைக்கப்பட்டதால், தடுப்பணையை பொன்ராஜ் தடுப்பணை என்றே கிராம மக்கள் அழைக்கின்றனர். தடுப்பணையில் இருந்து மேலே சுமார் ஒன்றை கிமீ தொலைவுக்கு மணல் சேர்ந்து தடுப்பணை நிரம்பியுள்ளது.
மீண்டும் மழைக்காலம் தொடங்கினால் பக்கத்திலுள்ள நிலங்களில் தண்ணீர் புகுவதைத் தவிர வேறுவழியில்லை. அந்தளவுக்கு மணல் ஆக்கிரமித்திருக்கிறது.
ஆனால், அதேநேரத்தில் பக்கத்திலுள்ள வீடுகளைப் புனரமைப்பு செய்ய அப்பகுதி மக்கள் சின்னாற்றில் மண் எடுக்க அனுமதி வழங்க ப்படுவதில்லை என்கிறார் கெம்பக்கரையைச் சேர்ந்த பச்சியப்பன்.
மணலையும் எடுக்க விடாமல், தண்ணீரையும் சேமிக்க வழியில்லாமல் திணறும் இந்த நிலையை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து, ஆற்றின் ஒரு பகுதி வனத் துறையின் கட்டப்பாட்டில் இருப்பதால் உரிய ஏற்பாடுகளை மழைக்கு முன்பாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com