நவீன ஆவின் பாலகத்தில் ரூ. 62 லட்சத்தில் பூங்கா திறப்பு

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள நவீன ஆவின் பாலகத்தில் ரூ. 62 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம்,

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள நவீன ஆவின் பாலகத்தில் ரூ. 62 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்படுத்துதலுடன் அமைக்கப்பட்ட பூங்காவை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சிகளால் பால் வளம் மற்றும் பண்ணை மேம்பாட்டுத் துறை மூலம் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதால் இந்தத் துறை ரூ. 361 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 230 பால் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் நாளொன்றுக்கு 1.08 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 17 பால் குளிரூட்டும் மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 73 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் பெறப்படுகிறது.
கடந்த 2014-15ஆம் ஆண்டு ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டும் கூடம் மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 2017-18ஆம் ஆண்டில் மாவட்டத்துக்கான சிறப்பு ஒதுக்கீடாக ரூ. 52 லட்சம் பெறப்பட்டு புனரமைத்தல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சிறுவர் பூங்கா, பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திர பாலாஜி.
விழாவுக்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொதுமேலாளர் எஸ். செல்வகுமார், தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் தலைவர் அ. மில்லர், துணைப் பதிவாளர் (பால் வளம்) மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com