மான் வேட்டை: ரூ.50 ஆயிரம் அபராதம்

அரூர் அருகே மான்களை வேட்டையாடியதாக இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரூர் அருகே மான்களை வேட்டையாடியதாக இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரூர் வட்டம், கௌôப்பாறை வனப்பகுதியில் அடிக்கடி மான்கள் வேட்டையாடப்படுவதாக வந்த புகாரின் பேரில், தீர்த்தமலை வனச்சரகர் எஸ்.தண்டபாணி தலைமையிலான வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் 2 பேர் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சிகளை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
விசாரணையில், கௌôப்பாறையைச் சேர்ந்த பெருமாள் (55), ஏழுமலை (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் அரூர் மாவட்ட வன அலுவலர் எஸ்.செண்பகப்பிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் வித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com