சிட்லிங் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தல்

தருமபுரி சிட்லிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி


தருமபுரி சிட்லிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையருக்கு மாவட்ட பாஜக செயலர் இரா. மாதுகவுண்டர் அனுப்பிய மனு:
சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அண்மையில் அதே பகுதியைச் சேர்ந்த இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சில நாள்கள் கழித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய போலீஸார் முறையான மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. சிறுமியின் உயிரிழப்புக்கு இரு சமூக விரோதிகள் மட்டும் காரணமல்ல, சிலர் சரியாக கடமையைச் செய்யாததும் காரணம்.
சாதி, பணம், அரசியல் பின்புலங்கள் எதுவும் விசாரணைக்குத் தடையாக இருந்து விடக் கூடாது. எனவே, இந்த வழக்கை மாநிலக் குற்றப்புலனாய்வுத் துறை (சிபி சிஐடி) விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com