ஜெயலலிதா வழியில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஆட்சி இடையூறின்றித் தொடரும்: அமைச்சர் கே.பி. அன்பழகன் பேச்சு

ஜெயலலிதாவின் வழியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிமுக ஆட்சி எவ்வித இடையூறும் இன்றித் தொடரும்

ஜெயலலிதாவின் வழியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிமுக ஆட்சி எவ்வித இடையூறும் இன்றித் தொடரும் என்றார்,  மாநில உயர்கல்வித் துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான கே.பி. அன்பழகன். 
ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான திமுக - காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து தருமபுரியில் மாவட்ட அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன பொதுக்
கூட்டத்தில் அவர் பேசியது:
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தி.மு.க.தான் முழு முதற்காரணம் என்பதை அப்போதே முதல்வர் ஜெயலலிதா விளக்கியிருக்கிறார்.  சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தவர்கள் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியினர்.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடனேயே அவர் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றதாகவே கருதத் தொடங்கிவிட்டனர்.  முதல்வர் பொறுப்பை என்றைக்கும் மக்கள் அவருக்குத் தர
மாட்டார்கள்.
ஜெயலலிதாவின் வழியில் தமிழ்நாட்டில் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆட்சி இங்கே நடந்து கொண்டிருக்கிறது.  எவ்வித இடையூறுமின்றி இந்த ஆட்சி தொடரும் என்றார்.  
கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலர் செ. செம்மலை பே சியது:
அதிமுகவைப் பார்த்து ஊழல் ஆட்சியை நடத்துவதாகச் சொல்வதற்கு திமுகவுக்கு எவ்வித தகுதியும் கிடையாது.  இது கோயபல்ஸ் பிரசாரம். இதை மக்கள் நம்பப் போவதில்லை. எதையாவது சொல்லி ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார்.  அவரது ஆசை நிராசையாகும். அராஜகம் இருக்காது,  அமைதியானஆட்சி என்ற நல்ல பெயரை அதிமுக ஆட்சி பெற்றிருக்கிறது.  மக்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது என்றார் செம்மலை. 
கூட்டத்துக்கு, மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தொ.மு. நாகராசன் தலைமை வகித்தார்.  அதிமுக விவசாயிகள் அணித் தலைவர் டி.ஆர். அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல்,  நகரச் செயலர் குருநாதன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பூக்கடை ரவி உள்ளிட்டோர் பேசினர்.  ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com