கம்பைநல்லூரில் ஸ்ரீ செல்லியம்மன் ஜாத்திரை திருவிழா

கம்பைநல்லூரில்  ஸ்ரீ செல்லியம்மன் சுவாமி ஜாத்திரை திருவிழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

கம்பைநல்லூரில்  ஸ்ரீ செல்லியம்மன் சுவாமி ஜாத்திரை திருவிழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ பட்டாளத்து அம்மன், ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ கோட்டை மாரியம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ அரசமரத்து மாரியம்மன், ஸ்ரீ திரௌபதியம்மன் ஆகிய 7 சுவாமிகளின் ஜாத்திரை திருவிழா ஆகஸ்ட் 16-ஆம் தேதி பானகம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து, ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, சாட்டல் பூசாரிக்கு மாலை அணிவித்தல்,  சுண்ணாம்புகாரத் தெரு கரக கோயிலில் இருந்து ஸ்ரீ பட்டாளத்து அம்மனுக்கு கரகம் பாரித்து செங்குந்தர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய கோயில் தெருக்கோடியில் இரண்டு கரகம் தலைக்கூடும் நிகழ்ச்சிகள், மாவிளக்கு எடுத்தல், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல், புதன்கிழமை காலை 11 மணியளவில் ஸ்ரீ செல்லியம்மன் கரகம் மாவிளக்கு தட்டுடன் புறப்பட்டு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மைதானத்தில் இரண்டு கரகமும் தலைக்கூடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, ஸ்ரீ செல்லியம்மன் சுவாமி ஆலயம் அடைந்து ஊஞ்சல் ஆட்டமும், அபிஷேக தீப ஆராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழாக் குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஓலைப்பட்டி, பூமிசமுத்திரம், கம்பைநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com