த.மா.கா. மாநில பொதுச் செயலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
By DIN | Published On : 14th April 2019 04:59 AM | Last Updated : 14th April 2019 04:59 AM | அ+அ அ- |

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் தீர்த்தராமன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து தீர்த்தராமன் தருமபுரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: இளம் வயதிலிருந்து நான் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். ஒரு முறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளேன். ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கிய போது, அவருடன் இணைந்து பணியாற்றினேன். மீண்டும் காங்கிரஸுடன் கட்சி இணைக்கப்பட்ட போது அங்கு தொடர்ந்து பணியாற்றி வந்தேன். மீண்டும் ஜி.கே.வாசன் பிரிந்து வந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றினேன். த.மா.கா.வில் மாநில பொதுச் செயலராக இருந்தேன்.
தற்போது தேர்தலையொட்டி த.மா.கா. அதிமுக-பாஜகவோடு கூட்டணி வைத்ததில் என்க்கு உடன்பாடு இல்லை. காங்கிரஸ் தொண்டராக பாஜகவுடன் த.மா.கா. கூட்டணி என்பதை ஏற்க முடியவில்லை. ஆகவே, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். தற்போது நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் வகையில் என் பணி அமையும் என்றார்.