காயும் பப்பாளி செடிகள்: விவசாயிகள் வேதனை

பப்பாளி மரங்களில் வாடல் நோய், வறட்சி காரணமாக போதிய விளைச்சலின்றி விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.


பப்பாளி மரங்களில் வாடல் நோய், வறட்சி காரணமாக போதிய விளைச்சலின்றி விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை மற்றும் அனுமன் தீர்த்தம், காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, மூன்றம்பட்டி, கோவிந்தாபுரம், குப்பநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். வாடல் நோய், வறட்சி போன்ற காரணத்தாலும் செடிகள் போதிய விளைச்சலைக் கொடுக்கவில்லை.
ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடைச் சேர்ந்த விவசாயி துரை (51) என்பவர் இதுகுறித்துக் கூறியதாவது:
மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் பப்பாளி பயிர் செய்தேன். கடந்த ஒரு வருடமாகப் பராமரித்து வந்த பப்பாளிச் செடிகளில் மகசூல் வரும் நேரத்தில் திடீரென வாடல்நோய், தாக்குதல் காரணமாக மகசூல் குறைந்தது. மேலும் தண்ணீர் இல்லாததால் செடிகள் காய்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு பப்பாளி பழம் கிலோ ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்பனையானது.  நிகழ் ஆண்டு பப்பாளி விளைச்சல் அதிகம் இருக்கும் என நம்பி பயிர் செய்தேன். மூன்று ஏக்கர் பப்பாளி செடியைப் பராமரிக்க ஒரு வருடத்தில் சுமார் ஒரு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். வாடல் நோய் மற்றும் பயிர் வளர்ப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com