புத்தகத் திருவிழா போட்டி: வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு

புத்தகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

புத்தகத் திருவிழாவையொட்டி நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தகடூர் புத்தகப் பேரவை சார்பில், தருமபுரியில் இரண்டாமாண்டு புத்தகத் திருவிழா ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. 
இத் திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நான் கண்ட தருமபுரி புத்தகத் திருவிழா என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன. இதில், அதியமான் கோட்டை செந்தில் மெட்ரிக். பள்ளி மாணவி எஸ்.யாழினி முதலிடம் வகித்தார். அதே பள்ளி மாணவி வி.சுஷ்மிதா இரண்டாமிடமும், பாலக்கோடு மாதிரிப் பள்ளி மாணவி பி.பூஜா மூன்றாமிடமும் பெற்றனர். மகாத்மா காந்தி-150 என்ற தலைப்பில் 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், ஆலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மு.மோகனா முதலிடமும், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.நவீன் குமார் இரண்டாமிடமும், செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி வி.சங்கமித்ரா மூன்றாமிடமும் பெற்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடைபெற்ற போட்டியில், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச.காவியா முதலிடமும், அதியமான் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி க.ஜெயப்பிரியா இரண்டாமிடமும், பாலக்கோடு மாதிரிப் பள்ளி மாணவி ச.ஸ்ரீபிரியா மூன்றாமிடமும் பெற்றனர். 10 , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வானமே எல்லை என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில், அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி ஆர்.ரேஷா முதலிடமும், செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.பிரிசில்லா ஜாய்சி இரண்டாமிடமும், தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுஜனிதா மூன்றாமிடமும் பெற்றனர். புவியைக் காப்போம் என்ற தலைப்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில் அதியமான் கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர் பி.சந்தீப் முதலிடம், சிகரம் பள்ளி மாணவி ஜி.தேவதர்ஷினி இரண்டாமிடம், தின்னப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர் சி.தர்ஷன் மூன்றாமிடம் பெற்றனர். 
6 முதல் 8 வரை நடைபெற்ற போட்டியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.வி.நவீன் குமார் முதலிடம், கம்மாளப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.சேதுபதி இரண்டாமிடம், சிகரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ராகவி மூன்றாமிடம் பெற்றனர். 9, 10-ஆம் வகுப்புகளுக்கு நடைபெற்ற போட்டியில் ஒளவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைநிதி முதலிடம், கம்பைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.ஷர்மி இரண்டாமிடம், செந்தில் பப்ளிக் பள்ளி மாணவி ஹரிணி, பையர்நத்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ப.மணிவாசகன் ஆகியோர் மூன்றாமிடம் பெற்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கு, நான் ஆணையிட்டால் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், தமிழ் இலக்கியம் முதுநிலை இரண்டாமாண்டு மாணவர் ச.கெளதம் முதலிடம், இளநிலை தமிழ் முதலாமாண்டு மாணவர் க.கவின் இரண்டாமிடம், இயற்பியல் விரிவாக்க மையத்தில் இயற்பியல் மாணவர் மு.சந்தோஷ் மூன்றாமிடம் பெற்றனர். என்னைக் கவர்ந்த புத்தகம் என்கிற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ் முதலாமாண்டு மாணவி ம.புனிதா முதலிடம், முதலாமாண்டு ஆங்கிலம் பயிலும் மாணவி ஜி.நிவேதா இரண்டாமிடம், இரண்டாமாண்டு தமிழ் மாணவர் த.ராஜேந்திரன் மூன்றாமிடம் பெற்றனர். கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாமாண்டு மாணவர் ச.கெளதம் முதலிடம், இரண்டாமாண்டு மாணவர் இரா.சிவலிங்கம் இரண்டாமிடம், பிஎஸ்சி., முதலாமாண்டு மாணவர் ச.சாரதி மூன்றாமிடம் பெற்றனர். இந்த மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
விழாவில், சித்தேரி அரசு மேல்நிலைப் பள்ளி, ஏரிமலை அரசுப் பள்ளி, சின்னப்பள்ளத்தூர் அரசுப் பள்ளி மற்றும் சந்தப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு தகடூர் புத்தகப் பேரவை சார்பில் தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com