ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தருமபுரி ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை மகோத்ஸவ விழா, புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தருமபுரி ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை மகோத்ஸவ விழா, புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தருமபுரி விருபாட்சிபுரம், உடுப்பி ஸ்ரீ புத்திகே மட கிளையில், ஸ்ரீ ராகவேந்திரர் 348-ஆவது ஆண்டு ஆராதனை மகோத்ஸவ விழா ஆகஸ்ட் 14-ஆம் தேதி புதன்கிழமை முதல் வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல்நாள், கொடியேற்றம், கோ பூஜையும் நடைபெற்றன. ஆக.15-ஆம் தேதி காலை ஸ்ரீ சத்யநாராயண சுவாமி பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, வருகிற 16-ஆம் தேதி பூர்வ ஆராதனையும், ஆக.  17-ஆம் தேதி மத்திய ஆராதனையும் நடைபெறுகின்றன. மேலும், அன்றைய தினம் காலை 8 மணிக்கு 1,008 இளநீர் அபிஷேகம் நடைபெறும்.
18-ஆம் தேதி உத்ர ஆராதனையும், 19-ஆம் தேதி கணபதி ஹோமமும், ஸ்ரீ சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனையும் நடைபெற உள்ளன. அதேபோல, விழா நாள்களில் காலை 5 மணிக்கு சுப்ரபாதமும், 6 மணிக்கு வேத பாராயணம், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு பல்லக்கு உத்ஸவம், 10.30 மணிக்கு ஸ்ரீ பிரகல்லாத சுவாமிக்கு கனக பூஜை, 10.45 மணிக்கு ஆன்மிக உரையும், 11.30 மணிக்கு ரதோத்ஸவம், பிற்பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இவைத் தவிர, நாள்தோறும் இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். ஆராதனை விழா ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் என். வெங்கடேசன், செயலர் ஆர். வெங்கட்ராமன், பொருளாளர் வி. முரளிதரன், புத்திகே மடத்தின் நிர்வாகி ஏ.பி.குஞ்சார், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com