அரசு, தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பை கட்டமைக்க வேண்டும்: நீர் மேலாண் இயக்க மத்தியக் குழுத் தலைவர் இந்தர் தமீஜா

அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பை கட்டமைக்க வேண்டும் என்று, நீர் மேலாண் இயக்க மத்தியக் குழுத் தலைவரும், இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சக

அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பை கட்டமைக்க வேண்டும் என்று, நீர் மேலாண் இயக்க மத்தியக் குழுத் தலைவரும், இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சக இணைச் செயலருமான இந்தர் தமீஜா கூறினார்.
 தருமபுரி மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக, நீர் மேலாண் திட்டப் பணிகளைப் பார்வையிட, இந்தர் தமீஜா தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை தருமபுரி வந்தனர்.
 தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலூர், கம்பைநல்லூர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் மரக் கன்றுகள் நடும் பணியை தொடக்கிவைத்த மத்தியக் குழுவினர், மொரப்பூர், தென்கரைக்கோட்டையில் நீர் மேலாண் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.
 இதைத் தொடர்ந்து, நீர் மேலாண் இயக்க திட்டத்தின் மத்தியக் குழு தலைவர் இந்தர் தமீஜா பேசியது: மரக் கன்றுகள் வளர்ப்பதில் உரிய திட்டமிடுதல் அவசியம். எதிர்கால தலைமுறைக்குப் பயனுள்ள மரக் கன்றுகளை அதிக அளவில் நட்டு பராமரிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மைத் திட்டத்தை தருமபுரி மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள் தூர்வாரும் பணி பரவலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மழைநீரை ஏரிகளில் தேக்கிவைக்கும் போது தண்ணீர் பிரச்னைகளை தவிர்க்கலாம். தண்ணீர் சேகரிப்பை அதிகப்படுத்த வேண்டும். கடந்த காலங்களை போல மழைநீர் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட வேண்டும். வனப் பகுதியில் மட்டுமல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். மழைநீர் சேகரித்தல், ஏரிகள், அணைகள், குளங்கள், தடுப்பணைகள் ஆகியவற்றை தூர்வாரி, ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் செறிவூட்ட வேண்டும். நீர் மேலாண்மை, மழை நீர் சேகரித்தல் குறித்து அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வுப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 இதையடுத்து, மத்தியக் குழுவினர், தருமபுரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் நீர் மேலாண் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு செய்தனர்.
 மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, வட்டாட்சியர் இளஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலிங்கம், ரவிச்சந்திரன், அருள்மொழித்தேவன், விமலன், ஜெயராமன், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com