தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கல் 

தருமபுரியில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தருமபுரியில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
 இக் கூட்டத்தில், 15 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள், 7 பயனாளிகளுக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ.7.14 லட்சம் மதிப்பிலான ஆணைகள் மற்றும் கட்டுமானம் தொடர்பான தொழிலில் ஈடுபடும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் 11 நபர்களை கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய பதிவு அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். மேலும், திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் தொடர்பான கேட்பு மனுக்கள் தொடர்பாக, விரைந்து உதவித்தொகைகள் தொழிலாளர்களுக்குச் சென்றடைய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுரைகளை ஆட்சியர் வழங்கினார். இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், ஊரக வளர்ச்சி ட்ட இயக்குநர் எம்.காளிதாசன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com