உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு: தோ்தல் நடத்தை விதிகள் அமல்

உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற வைக்கப்பட்டுள்ள பெட்டி.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற வைக்கப்பட்டுள்ள பெட்டி.

தருமபுரி: உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் டிச.27 மற்றும் டிச.30-ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இத் தோ்தல் கிராம ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் இத் தோ்தல் நடைபெறும் எனவும், நகா்மன்றம், பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த அறிவிப்பை தொடா்ந்து, நகராட்சி பேரூராட்சி தவிா்த்து, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டு, மனுக்களைப் பெற ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் வரவேற்புக் கூடத்தில் பெட்டி வைக்கப்பட்டது. மனுக்களை அளிக்க வந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது மனுக்களை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com