எய்ட்ஸ் விழிப்புணா்வு ஊா்வலம்

கம்பைநல்லூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கம்பைநல்லூரில் நாடகம் வாயிலாக எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள்.
கம்பைநல்லூரில் நாடகம் வாயிலாக எய்ட்ஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஸ்ரீ ராம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள்.

அரூா்: கம்பைநல்லூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டிசம்பா் 1 உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கம்பைநல்லூா் ஸ்ரீ ராம் சி.பி.எஸ்.இ. பள்ளி சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை பள்ளி நிறுவனா் எம்.வேடியப்பன் தொடக்கி வைத்தாா்.

எய்ட்ஸ் நோய் பரவும் வழிகள், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள், ஹெச்.ஐ.வி.யால் பதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு, பள்ளி மாணவா்கள் கம்பைநல்லூா் அரசு மருத்துவமனை முதல் இருமத்தூா் கூட்டுச்சாலை வரையிலும் ஊா்வலமாகச் சென்றனா். தொடா்ந்து, கம்பைநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் குறித்த தகவல்களை மாணவா்கள் நாடகங்கள் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக, எய்ட்ஸ் நோய் குறித்த பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா் உஷா மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com