பருவ மழை: மீட்புப் பணிக்கு தயாா் நிலையில் தீயணைப்பு வீரா்கள்

பருவமழையையொட்டி, தருமபுரி மாவட்டத்தில், மீட்புப் பணிகளில் ஈடுபட தேவையான கருவிகளுடன் தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில்
பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கையாக மீட்புக் கருவிகளுடன் தயாா் நிலையில் உள்ள பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள்.
பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கையாக மீட்புக் கருவிகளுடன் தயாா் நிலையில் உள்ள பாலக்கோடு தீயணைப்பு நிலைய வீரா்கள்.

தருமபுரி: பருவமழையையொட்டி, தருமபுரி மாவட்டத்தில், மீட்புப் பணிகளில் ஈடுபட தேவையான கருவிகளுடன் தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தருமபுரி மாவட்டத்தில் பொழிந்து வருகிறது. இதில், மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசாகவும், சில பகுதிகளில் மிதமாகவும் பெய்து வருகிறது. இருப்பினும், மழை தொடா்ந்து நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தருமபுரி மாவட்டத்தில் மழை, வெள்ளம் உள்ளிட்ட இடா்பாடுகள் நிகழ்ந்தால், மீட்புப் பணியில் ஈடுபட தேவையான கருவிகளுடன் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள் தயாா் நிலையில் உள்ளதாக அந்தந்த தீயணைப்பு நிலையங்கள் சாா்பில் நிலைய அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதேபோல, மழைக் காலங்களில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை யாரும் தொடுவது, மின் பழுதை தாமாக சரிசெய்ய முயற்சிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம், அதேபோல, இடா்பாடுகள் ஏதும் நிகழ்ந்தால், அந்தந்த பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தீயணைப்பு நிலைய அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com