விவசாயி மீது தாக்குதல்: 4 பேர் கைது
By DIN | Published On : 14th February 2019 09:38 AM | Last Updated : 14th February 2019 09:38 AM | அ+அ அ- |

பொம்மிடி அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகே கும்பாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி மகன் செந்தில் (49). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேகர் குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். புதன்கிழமை காலை 8 மணியளவில், செந்தில் மற்றும் சேகர் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, சேகர் குடும்பத்தினர் சிலர் செந்தில் மீது தாக்குதல் நடத்தியும், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின் பேரில், கும்பாரஹள்ளியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன்கள் சேட்டு (40), பூபதி (32), சேட்டு மகன் சந்துரு (22), சேகர் மகன் மாயக்கண்ணன் (36) ஆகிய நான்கு பேரை பொம்மிடி போலீஸார் கைது செய்தனர்.