மின் கம்பங்களை சீரமைக்க பா.ஜ.க. கோரிக்கை

அரூர் - சித்தேரி சாலையோரத்தில் அமைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க க விடுத்துள்ளது.

அரூர் - சித்தேரி சாலையோரத்தில் அமைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க க விடுத்துள்ளது.
இது குறித்து விவசாய அணி மாவட்டப் பொதுச் செயலர் குழந்தை ரவி,  முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: 
 அரூர் முதல் சித்தேரி வரையிலான தார்ச் சாலை சுமார் 26 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்தச் சாலையின் இருபுறத்திலும் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்தேரி சாலையில் உள்ள சுமைதாங்கி மேடு, வேடியப்பன் கோயில் தேங்காய் உடைக்கும்  மரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மின் கம்பங்கள் சாய்வாகவும், மிகவும் ஆபத்தான நிலையிலும் உள்ளன. இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சித்தேரி சாலையோரத்தில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதால், பலத்த காற்று வீசும் போது மின்சார வயர்கள் தார்ச் சாலையில் விழுவதற்கான நிலையும், உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, அரூர் - சித்தேரி சாலையில் பாதுகாப்பற்ற வகையில் உள்ள மின் கம்பங்களை சீரமைப்பு செய்ய மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com