கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலியை அகற்றக் கோரிகுடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்

கூத்தப்பாடியில் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலியை அகற்றக் கோரி, குடும்ப அட்டை, ஆதார் அட்டையை

கூத்தப்பாடியில் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலியை அகற்றக் கோரி, குடும்ப அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்க கிராம மக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். 
தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் அருகே கூத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சுமார் 50 - க்கும் மேற்பட்டோர் தங்கள் கிராமத்தில் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள  தீண்டாமை வேலியை அகற்றிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வீசி தர்னாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து,  தகவல் அறிந்த வந்த சார் -ஆட்சியர் ம.ப.சிவன் அருள் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கூத்தப்பாடி கிராமத்தில், நாங்கள் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அதேபோல, மற்றொரு தரப்பைச் சேர்ந்த 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  ஊரின் நுழைவுப் பகுதியில் முனியப்பன் கோயில்  உள்ளது. அரசு எங்களுக்கு கட்டிக்கொடுத்துள்ள குடியிருப்புகளுக்கு இந்தக் கோயில் அமைந்துள்ள புறம்போக்கு நிலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதை தடுக்க நினைத்த எதிர்தரப்பினர், கோயிலைச் சுற்றி கம்பி வேலி அமைக்க முயன்றனர். 
இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதைத் தொடர்ந்து, எதிர்தரப்பினர் அப்பகுதியில் கம்பிவேலி அமைத்து விட்டனர். இதனால், எங்கள் குடியிருப்புகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தவிக்கிறோம். எனவே, தீண்டாமை வேலியாக அமைக்கப்பட்டுள்ள இந்த வேலியை உடனே அகற்றிடவும், எங்கள் கிராம மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, இது தரப்பினரை அழைத்துப் பேசி, சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக சார் -ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com