வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டக் குழுக் கூட்டம், இலளிகம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜி.மாதையன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவித்த நிலையில், உடனே வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும். கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அரசு விதிமுறைகளின் படி பெற்றோர்-ஆசிரியர் கழகங்களை உடனே ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு அரசு மானியங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். 2017-18-ஆம் ஆண்டுகளில் கல்வி பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com