குடிநீர் பற்றாக்குறையைப் போக்க எம்.எல்.ஏ வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

தருமபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தடங்கம் பெ.சுப்ரமணி கோரிக்கை விடுத்துள்ளார். 
இது குறித்து அவர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழியிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தருமபுரி மாவட்டத்தில், பரவலாக அனைத்து கிராமங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களாக மழை பொழிந்தபோதிலும், போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், தருமபுரி நகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, கிராம மக்கள் எங்களிடத்தில் கோரிக்கை மனுக்களையும் அளித்து வருகின்றனர். எனவே, மாவட்டத்தில், நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இந்த பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com