சிபிஎஸ்இ மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் விநியோகம்

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் சொ.ஹேமா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பி.காம்., பி.காம்., (சிஏ), கூட்டுறவு, கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் என 21 பாடப் பிரிவுகள் உள்ளன. 
இப் பாடப் பிரிவுகளில் மாநிலத் தேர்வு முறையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சேர்க்கைக்கான  விண்ணப்பங்கள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி மே 6-ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.
அதேபோல, மே 2-ஆம் தேதி வெளியான சிபிஎஸ்இ தேர்வு முறையில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தற்போது தொடங்கி வரும் மே 15-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் நாள்தோறும் மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. பொதுப் பிரிவினர் ரூ.50 செலுத்தியும், தலித் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் அசல் ஜாதிச் சான்று காண்பித்தும் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com