5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

தருமபுரி சட்டக் கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 16-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தருமபுரி சட்டக் கல்லூரியில் 5 ஆண்டுகள் சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 16-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தருமபுரி சட்டக் கல்லூரி முதல்வர் ப. சிவதாஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கைகான விண்ணப்பங்கள் மே 16- ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. தருமபுரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும், தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில் அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தலித் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 செலுத்தி, ஜாதி சான்றிதழ் சமர்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதர பிரிவு மாணவ, மாணவியர் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, மூன்றாண்டு சட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூன் 28 முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. தருமபுரி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com