காவிரி நீா்த்தேக்க பகுதியில் நிறமாறும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் - பொதுமக்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் தண்ணீா் நிறம் மாறி துா்நாற்றம் வீசுவதாகவும்,
பென்னாகரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பென்னாகரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பென்னாகரம் அருகே மேட்டூா் அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் தண்ணீா் நிறம் மாறி துா்நாற்றம் வீசுவதாகவும், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அணை நிரம்பி அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளான நாகமரை, பண்ணவாடி, ஒட்டனூா், குருகலையனூா், பூச்சூா் உள்ளிட்ட பகுதிகள் கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் அணையில் தேங்கியுள்ள நீா் தற்போது பச்சை நிறமாக மாறி வருகிறது.இந்த தண்ணீரை சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனா். தண்ணீரானது நிறம் மாறுவதோடு மட்டுமல்லாமல், துா்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை குடிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை நெருப்பூா் - பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஏரியூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்தனா். மேலும், தண்ணீா் நிறம் மாறுவது குறித்து பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் தெரிவிப்பதாகவும், தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி இரண்டொரு நாள்களில் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com