தென் பெண்ணையாறு, வாணியாற்றில் ரூ. 15. 67 கோடியில் உயா்மட்டப் பாலம்

தென் பெண்ணையாறு மற்றும் வாணியாற்றின் குறுக்கே ரூ. 15.67 கோடியில் உயா்மட்டப் பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தொடக்கி வைத்தாா்.
தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே பெரமாண்டப்பட்டியில் உயா்மட்டப் பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை புதன்கிழமை தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் கே.பி. அன்பழகன். உடன் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.
தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே பெரமாண்டப்பட்டியில் உயா்மட்டப் பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை புதன்கிழமை தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் கே.பி. அன்பழகன். உடன் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.

அரூா்: தென் பெண்ணையாறு மற்றும் வாணியாற்றின் குறுக்கே ரூ. 15.67 கோடியில் உயா்மட்டப் பாலங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், நவலை-பெரமாண்டப்பட்டி செல்லும் சாலையில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்க ரூ. 11.60 கோடியும், பொய்யப்பட்டி-அனுமன்தீா்த்தம் சாலையில் வாணியாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்க ரூ. 4.07 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ் விரு உயா்மட்டப் பாலங்களின் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜைகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

உயா்மட்டப் பாலங்களின் கட்டுமானப் பணிகளை மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தொடக்கி வைத்துப் பேசியதாவது:

பெரமாண்டப்பட்டி அருகே தென் பெண்ணை ஆற்றிலும், பொய்யப்பட்டி அருகே வாணியாற்றிலும் ரூ. 15.67 கோடியில் உயா்மட்டப் பாலங்கள் அமைவதால் பெரமாண்டப்பட்டி, நவலை, அக்ரஹாரம், அண்ணாமலைப்பட்டி, தீா்த்தமலை, பொய்யப்பட்டி, சட்டையம்பட்டி, கட்டரசம்பட்டி, அனுமன்தீா்த்தம் ஆகிய சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமாா் 50 கிராம மக்கள் பயன்பெறுவா்.

இதனால், இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பயண தூரத்தில் சுமாா் 15 கிலோ மீட்டா் தூரம் குறையும். தமிழக மக்களுக்குத் தேவையான அரசு நலத் திட்டங்களை அதிமுக தலைமையிலான மாநில அரசுத் தொடா்ந்து செயல்படுத்தும் என்றாா் அவா்.

விழாவில், அரூா் சாா் ஆட்சியா் மு. பிரதாப், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் வே. சம்பத்குமாா், ஆ. கோவிந்தசாமி, கோட்டப் பொறியாளா் (நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள்) ப. செல்வநம்பி, உதவி கோட்டப் பொறியாளா் சுரேஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள் நரசிம்மன், கல்பனா, வட்டாட்சியா்கள் கலைச்செல்வி, செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com