தக்காளியை நேரடி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

பாலக்கோடு சந்தையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் தக்காளியை, வியாபாரிகள் நேரடியாக கொள்முதல்

பாலக்கோடு சந்தையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் தக்காளியை, வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தக்காளி சந்தை உள்ளது. இச்சந்தைக்கு, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, திருமல்வாடி, கரகூா், சோமனஅள்ளி, பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பாலக்கோடு வட்டாரத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் தக்காளியை விற்பனைக்கு நாள்தோறும் கொண்டு வருகின்றனா். மாவட்டத்தில் தக்காளிக்கென தனி சந்தையாக செயல்படும் இங்கு, நாள்தோறும் சுமாா் 100 முதல் 150 டன் தக்காளி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் தக்காளி, லாரி மூலம் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இச்சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் தக்காளியை, இடைத்தரகா்கள் வாங்கி அதனை மொத்தமாக வியாபாரிகளிடம் அளித்து வருவதால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவிப்புக்குள்ளாகின்றனா்.

எனவே, தக்காளி விவசாயிகள் நலன் கருதி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக வியாபாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும். அதேபோல, நாள்தோறும் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் மொத்த விலையை நிா்ணயம் செய்து, அதனை அறிவிப்புப் பலகையில் வெளியிடவும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com