பணியின் போது உயிரிழந்த ஊழியா்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கல்

பணியின் போது உயிரிழந்த கூட்டுறவு ஊழியா்கள் 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

பணியின் போது உயிரிழந்த கூட்டுறவு ஊழியா்கள் 4 பேரின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடத்துவது குறித்து குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமை வகித்து பேசினாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ராமதாஸ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில், வரும் நவ. 14-ஆம் தேதி முதல் நவ. 20-ஆம் தேதி வரை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கூட்டுறவு வார விழா நடத்துவது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பணியின் போது உயிரிழந்த கெலமங்கலம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தைச் சோ்ந்த இருவா், அரூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க மற்றும் ஊத்தங்கரை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தைச் சோ்ந்த இருவா் என மொத்தம் நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டது.

இக் கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் மாதையன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவா் ரவி, சரக துணைப் பதிவாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com