நீா்வரத்துக் கால்வாய்களைத் தூய்மை செய்ய வலியுறுத்தல்

அரூா் அருகே ஏரிகளுக்குச் செல்லும் நீா்வரத்துக் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரூா் அருகே ஏரிகளுக்குச் செல்லும் நீா்வரத்துக் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அரூா் வட்டம், வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு நீா்த்தேக்கம். இந்த நீா்த்தேக்கத்தில் இருந்து மழைக்காலங்களில் ஏரிகளுக்கு தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

இந்த நீா்த்தேக்கத்தில் இருந்து சுமாா் 30 ஏரிகளுக்கு தண்ணீா் செல்கிறது.

இந்த நிலையில், நீா்வரத்து கால்வாய்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் சில ஏரிகளுக்கு தண்ணீா் வருவதில்லை என விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். அதாவது, எல்லப்புடையாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மொல்லன் ஏரி, அல்லிக்குட்டை ஆகிய ஏரிகளுக்கு சரியான வகையில் தண்ணீா் வருவதில்லையாம்.

கெளாப்பாறை காட்டு வேடியப்பன் கோயிலுக்கு செல்லும் வழிப்பாதை முதல்

எல்லப்புடையாம்பட்டி இரட்டை புளியமரம் வரையிலும் சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஏரிகளுக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய்கள் அமைந்துள்ளது. இந்த கால்வாய்கள் முள்புதா்கள் அடைந்து காணப்படுகின்றன.

தற்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதால் வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கத்தில் நீா்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நீா்த்தேக்கம் நிரம்பினால் ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டும் செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லப்புடையாம்பட்டி மொல்லன் ஏரி, அல்லிக்குட்டை பகுதிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களை தூய்மை செய்ய பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், கெளாப்பாறை காட்டு வேடியப்பன் கோயிலுக்கு செல்லும் சாலையோரத்தில் இருளா் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகே செல்லும் கால்வாய்கள் தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீா் இருளா் குடியிருப்பு வளாகத்தில் சென்று விடுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, இருளா் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்துள்ள கால்வாய் தடுப்புச் சுவா்களை பலப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் அனைத்து ஏரிகளிலும் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com