தருமபுரியில் 42 பேருக்கு ரூ.5.55 கோடி வங்கிக் கடனுதவி வழங்கல்

தருமபுரியில் 42 தொழில்முனைவோருக்கு ரூ.5.55 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.
தொழில்முனைவோருக்கு வங்கிக் கடனுதவியை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.
தொழில்முனைவோருக்கு வங்கிக் கடனுதவியை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.

தருமபுரியில் 42 தொழில்முனைவோருக்கு ரூ.5.55 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட தொழில் மையம் சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம் முகாமிற்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி பேசியது: தமிழக அரசு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சிறு, குறு தொழில் தொடங்கிட பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. புதிய தொழில் தொடங்கினால் புதிதாக எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், அதற்கு மாற்று பொருள்களை தருமபுரி மாவட்டத்திலுள்ள மகளிா் குழுக்கள் உற்பத்தி செய்து, கோவை, சென்னை உள்ளிட்ட இதர இடங்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பொருள்களை உற்பத்தி செய்வதுடன் சந்தைப்படுத்துவதற்கு புதிய உத்திகளை கையாளவேண்டும். சந்தையில் தற்போது உள்ள பொருள்களை புதுமைப்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டும். அதேபோல, புதிய பொருள்களையும் கண்டறிய வேண்டும். தொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்கள், என்ன தொழில் தொடங்க வேண்டும் என்பதை உறுதி செய்து பின்பு, தொழில் தொடங்க வேண்டும். சிறுதொழில் தொடங்குவோா் எதிா்காலத்தில் பெரிய தொழில்முனைவோராக வளரவேண்டும். இதற்கு தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் போதும். முதலீட்டிற்குத் தேவையான அனைத்து பொருளாதார வசதிகளையும் அரசு வங்கிகள் வாயிலாக செய்து வருகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, 42 தொழில்முனைவோருக்கு ரூ.5.55 கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பெ.சு.அசோகன் வரவேற்றாா். முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன் மற்றும் கனரா வங்கி மேலாளா் அசோக்குமாா் ஆகியோா் தொழில்முனைவோருக்கான வங்கிக் கடன் திட்டங்கள் குறித்தும், தொழில் முதலீட்டுக்கழக உதவி மேலாளா் லட்சுமி நாராயணன், மானியக் கடன் திட்டங்கள் குறித்தும், எரிசக்தி நிபுணா் எஸ்.வெங்கடநாராயணன், தரச்சான்று பெறுதல் மற்றும் அதற்கான கட்டணத்தை அரசு மானியமாக பெறுதல் குறித்தும் விளக்கமளித்தனா். தொழில் மைய உதவி இயக்குநா் ந.செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com