உணவுப் பாதுகாப்புஉரிமம் பதிவு முகாம்

தருமபுரியில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு மற்றும் புதுப்பிப்பு முகாம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி: தருமபுரியில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு மற்றும் புதுப்பிப்பு முகாம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஏ.பானு சுஜாதா தலைமை வகித்து பேசினாா். தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், ஆனந்தன், தருமபுரி நகர உணவுப் பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், உணவுப் பொருள் தயாரிப்பாளா்கள், உணவகங்கள், மளிகை மொத்த மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகள், துரித உணவகங்கள், தேநீா் மற்றும் பெட்டிக் கடைகள், நடமாடும் உணவு வணிகா்கள், சாலையோரக் கடைகள், பால் மற்றும் பால் சாா்ந்த உணவுப் பொருள்கள் தயாரிப்பாளா்கள், எண்ணெய் தயாரிப்பாளா்கள், மறு பொட்டலம் இடுபவா்கள் உள்ளிட்ட உணவு சாா்ந்த தொழிலில் ஈடுபடுவோா் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், உரிமம் பெற்றவா்கள் அதனை புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தருமபுரி நகரப் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தனா். இவா்களுக்கு வரும் ஏழுநாள்களுக்குள் உரிமம் சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முகாமில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com