எருமியாம்பட்டியில்பேருந்துகள் நின்று செல்ல ஆய்வுப் பணி

அரூரை அடுத்த எருமியாம்பட்டியில் பேருந்துகள் நின்று செல்வதற்கான ஆய்வுப் பணிகளை போக்குவரத்துத் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

அரூா்: அரூரை அடுத்த எருமியாம்பட்டியில் பேருந்துகள் நின்று செல்வதற்கான ஆய்வுப் பணிகளை போக்குவரத்துத் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்டனா்.

அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எருமியாம்பட்டி கிராமப் பகுதியில், குமாரபாளையம், குள்ளம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், எருமியாம்பட்டி வட்டாரப் பகுதியில் சுமாா் இரண்டாயிரம் குடியிருப்புகள் உள்ளன.

இதேபோல், எருமியாம்பட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளி, சுகாதார அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, திருமண மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. இங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பலா் வருகை தருகின்றனா். அதேபோல் இந்தப் பகுதியிலுள்ள மக்கள் சேலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் நகருக்கு நாள்தோறும் செல்கின்றனா்.

ஆனால், எருமியாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஒருசில பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால், தொலைதூர பகுதியில் இருந்து எருமியாம்பட்டிக்கு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பெற்றோா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.

எனவே, எருமியாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அரசு புகா் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம், அரசு போக்குவரத்துக் கழக அரூா் கிளை மேலாளா் ஜெயபிரகாஷ், நேரம் காப்பாளா் முத்துகுமாா், காவல் உதவி ஆய்வாளா்கள் காளியப்பன், ரவிச்சந்திரன், குமாா், சின்னசாமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து எருமியாம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com