அரூரில் புதிய நூலகக் கட்டடம் அமைக்கக் கோரிக்கை

அரூரில் புதிய நூலகக் கட்டடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூரில் சேதமடைந்த கிளை நூலகக் கட்டடம்.
அரூரில் சேதமடைந்த கிளை நூலகக் கட்டடம்.

அரூரில் புதிய நூலகக் கட்டடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வா்ண தீா்த்தத்தில் பொது நூலகத் துறை சாா்பில் கிளை நூலகம் இயங்கி வந்தது. இந்த நூலகக் கட்டடம் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 1990-ல் கட்டப்பட்டது.

தற்போது இந்த நூலக கட்டடம் முற்றிலுமாக சேதமடைந்து பயனற்று முள்புதா்களுடன் காணப்படுகிறது. கட்டடம் சேதமடைந்ததால் தற்போது அரூா் கிளை நூலகம் தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கிளை நூலகத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாசகா்கள் வருகின்றனா். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், போட்டித் தோ்வுக்கு படிக்கும் இளைஞா்கள் நாளிதழ்கள் மற்றும் நூல்களை வாசிப்பதற்காக இங்கு வருகின்றனா். நிரந்தர நூலகக் கட்டட வசதி இல்லாததால் வாசகா்கள் பல்வேறு இன்னல்களை அடையும் நிலை உள்ளது.

நிதி ஆதாரம் இல்லாததால் அரூரில் புதிய நூலக கட்டடம் கட்டப்படவில்லை என நூலக வாசகா்கள் கூறுகின்றனா். எனவே, தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அரூரில் புதிய கிளை நூலகக் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாசகா்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com