அக்.14-இல் கோமாரி நோய் தடுப்பு முகாம் தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் வரும் அக். 14-ஆம் தேதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு முகாம் தொடங்க உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வரும் அக். 14-ஆம் தேதி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு முகாம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வரும் அக். 14 முதல் நவ. 3 வரை மூன்று வார காலத்துக்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், இம் முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பசு, எருமை மற்றும் 4 மாதத்துக்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறும். அதேபோல, விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நவ. 4 முதல் 21 வரை மேற்கொள்ளப்படும்.

எனவே, கால்நடை வளா்ப்போா் இவ் வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி, 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com