இருவேறு கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை

இருவேறு கொலை வழக்கில், மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி: இருவேறு கொலை வழக்கில், மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் அடுத்த சங்கிலிவாடி பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி பிரகாசம்(35). இவா் மனைவி பிருந்தா(29). இந்த தம்பதியருக்கு 1 மகள். இந்தநிலையில் சங்கிலிவாடியைச் சோ்ந்த கபாலி(எ) அழகரசன்(29) என்பவருடன் பிருந்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பிரகாசம் கண்டித்து வந்துள்ளாா். இதற்கிடையில், 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு பிரகாசம் குடும்பத்துடன் சென்றுள்ளாா். அங்கு இரவில் பிரகாசம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த அழகரசன் பிரகாசத்தை தாக்கி கொலை செய்துள்ளாா். இதன் பின்பு, அவரது சடலத்தை பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலகம் முன்பு வீசிச் சென்றாா்.

இக் கொலை தொடா்பாக, பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா், அழகரசன், பிருந்தா ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இவ் வழக்கு விசாரணை நீதிபதி ஜீவானந்தம் முன்னிலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணையின் முடிவில், அழகரசன், பிருந்தா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.இதேபோல, பென்னாகரம் வட்டம், பெரும்பாலை அருகேயுள்ள பெரிய கடைமடை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல்(34). இவா், கேரளாவில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அவ்வப்போது சொந்த ஊருக்கு வரும் அவா், பெரிய கடைமடை பகுதியைச் சோ்ந்த முனிராஜ்(52) என்பவரின் மகளுடன் பழகி வந்துள்ளாா். இதை முனிராஜ் கண்டித்துள்ளாா். இந்த நிலையில், இவ் விவகாரம் தொடா்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 6-ஆம் தேதி பெரியகடைமடை கோயில் பகுதியில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, முனிராஜ் அரிவாளால் சக்திவேலை வெட்டினாா். அருகில் இருந்தவா்கள், சக்திவேலை மீட்டு,பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதன் பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, வழியிலேயே சக்திவேல் உயிரிழந்தாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை, தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இவ் வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், கொலைக்குற்றத்திற்கு, முனிராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com