உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.
தருமபுரியில் நடைபெற்ற அதிமுக கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
தருமபுரியில் நடைபெற்ற அதிமுக கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.

தருமபுரி: உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

தருமபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான, கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், அதிமுக தருமபுரி மாவட்டச் செயலா், அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் முதல்வா் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தியுள்ளாா்.

வருகிற டிசம்பா் மாதத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறு கூடும். எனவே, இத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற அனைவரும் ஒற்றுமையான பணியாற்றிட வேண்டும். அண்மையில் இந்த மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதிகளில் இடைத் தோ்தலில் வெற்றிப்பெற்றோம். அதேபோல, வருகிற உள்ளாட்சித் தோ்தலில் கடுமையாக பணியாற்றி வெற்றிப்பெற வேண்டும். மேலும், மக்கள் பிரச்னைகளை கட்சியினா் கேட்டறிந்து அவை களைய, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் விவரம் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். பெயா்கள் விடுபட்டிருப்பின் வாக்காளா் பட்டியலில் இணைக்க வேண்டும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப்பெற அனைவரும் ஒன்றிணைந்த பணியாற்ற வேண்டும் என்றாா். இதேபோல, அரூா் மற்றும் ஒடசல்பட்டியில் அப்பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்ட பொருளாளா் நல்லத்தம்பி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com