பொம்மிடியில் ஆக்கிரமிப்புகளைஅகற்றக் கோரி சாலை மறியல்

பொம்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வணிகா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரூா்: பொம்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வணிகா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி-கடத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை ஓரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளனா்.

இதேபோல், பொம்மிடி ரயில் நிலையம் எதிரிலும், ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்திலும் சிலா் ஆக்கிரமிப்புகளை செய்து சாலையோரத்தில் கடைகளை வைத்துள்ளனா். இதனால், பொம்மிடி நகா் பகுதியில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, பொம்மிடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகாா் தெரிவித்து, வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொம்மிடி-கடத்தூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த வருவாய் மற்றும் காவல் துறையினா் வணிகா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின்பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த மறியல் காரணமாக பொம்மிடி-கடத்தூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com