குடிமைப் பணி முதனிலை தேர்வு: இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வுக்கு நடைபெறும் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வுக்கு நடைபெறும் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமி சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை காமராஜர் பல்கலைக்கழக இளைஞர் நலப் படிப்பியல் துறையால் தமிழக அரசு நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதனிலைத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
 நிகழாண்டில், 2020-க்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வை செய்வதற்கான தெரிவுத் தேர்வு வருகிற நவ.10 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 முதல் நண்பகல் 12.30 நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பில் தேர்ச்சிப்பெற்ற 2020, ஆக.1அன்று 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
 தெரிவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற 100 நபர்களை தமிழக அரசின் இன சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கான பயிற்சி வருகிற டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தொடங்கி 2020, மே 30-ஆம் தேதி வரை நடைபெறும். பயிற்சி இலவசமாகும். வெளியூர் நபர்களுக்கு தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் உணவு ஊக்கத்தொகை ரூ.2000 வழங்கப்படும்.
 நுழைவுத் தேர்வில் இந்திய வரலாறு மற்றும் தேசிய இயக்கம், இந்தியா மற்றும் உலக புவியியல் இந்திய அரசியலைமைப்பு, நிர்வாக முறை, பொருதாராம், சமூக வளர்ச்சி, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சுற்றுப்புற சூழ்நிலை தொடர்பான பொது விவாதங்கள், உயிரின பரிணாம வளர்ச்சி, பருவநிலை மாற்றங்கள், ஆங்கிலம் மற்றும் பொதுத் திறனறித் தேர்வு ஆகியவற்றில் கேட்கப்படும் 100 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
 பயிற்சியில் சேர விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழக வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்ததேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவற்றை மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும். அதனுடன் ரூ.5 அஞ்சல் முத்திரை ஒட்டப்பட்ட சுய முவகரி எழுதப்பட்ட இரண்டு உறைகளை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தினை, பயிற்சி இயக்குநர், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமி, இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை என்கிற முவகரிக்கு வருகிற அக்.10-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு:0452-2458231, 98656 55180 என்கிற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com