கீழ்ராஜா தோப்பு, காமலாபுரத்தில் முழுநேர நியாய விலைக்கடைகள் திறப்பு

தருமபுரி அருகே கீழ்ராஜா தோப்பு மற்றும் காமலாபுரத்தில் முழுநேர நியாயவிலைக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டன. 

தருமபுரி அருகே கீழ்ராஜா தோப்பு மற்றும் காமலாபுரத்தில் முழுநேர நியாயவிலைக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டன. 
பகுதிநேர நியாய விலைக் கடைகளாக இருந்த கீழ்ராஜாதோப்பு மற்றும் காமலாபுரம் ஆகிய கடைகள் முழுநேர நியாய விலைக் கடைகளாக தரம் உயர்த்தப்பட்டன. இவ்விரு நியாய விலைக் கடைகளையும் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்து பேசியது:  தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 447 முழுநேர நியாயவிலைக் கடைகள், 562 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 9 மகளிர் நியாயவிலைக் கடைகள் என  மொத்தம் 1,018 நியாய விலைக் கடைகள், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 41 கடைகள் என ஆக மொத்தம் 1059 நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. 
தருமபுரி வட்டம்,  கே.கே.162 என்.எஸ்.ரெட்டியூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் கீழ்ராஜாதோப்பு பகுதிநேர நியாயவிலைக் கடை 506 குடும்ப அட்டைகளுடன் வாரத்தில் 2 நாள்கள் மட்டும் (புதன் மற்றும் வெள்ளி) செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைதாரர்கள் அதிக அளவில் உள்ளதால், அத்தியாவசியப் பொருள்களை பெற சிரமம் ஏற்பட்டு வந்ததால், கீழ்ராஜாதோப்பு பகுதிநேர நியாயவிலைக்கடை 448 - ஆவ து முழுநேர நியாய விலைக் கடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி இந்த நியாய விலைக் கடை வாரத்தில் 6 நாள்களும் செயல்படும். அதேபோல, காரிமங்கலம் வட்டம், எஸ்.4090 கொளகத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் கட்டுப்பாட்டில் காமலாபுரம் பகுதிநேர நியாய விலைக் கடை 536 குடும்ப அட்டைகளுடன் வாரத்தில் 2 நாள்கள் மட்டும் (திங்கள் மற்றும் வெள்ளி) செயல்பட்டு வந்தது. குடும்ப அட்டைதாரர்கள் அதிக அளவில் உள்ளதால் அவர்களின் சிரமத்தைத் தவிர்க்க காமலாபுரம் பகுதிநேர நியாய விலைக் கடை 449-ஆவது முழுநேர நியாய விலைக் கடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி இந்த நியாய விலைக் கடையும் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும். கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைப் பொது மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 
இதனைத் தொடர்ந்து, அதியமான்கோட்டை ஏரியில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், துணைப் பதிவாளர்கள் ரவிச்சந்திரன், பார்த்தசாரதி,  முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் எம்.முனுசாமி, வட்டாட்சியர்கள் சுகுமார், கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com