அரசு பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

தருமபுரி மாவட்டம் செக்கோடி, பஞ்சப்பள்ளி, பொ.மல்லாபுரம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் செக்கோடி, பஞ்சப்பள்ளி, பொ.மல்லாபுரம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாம் மற்றும் மகிழம் அறக்கட்டளை சார்பில், பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் அமானுல்லா, மகிழம் அறக்கட்டளை நிர்வாகிகள் மணிகண்டன், திலீப்குமார், பள்ளி முன்னாள் மாணவர்கள் முரளி, வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணி திட்ட முகாம் வேப்பிலைப்பட்டியில் நடைபெற்றது. கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய முகாம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம் முகாமில் தூய்மைப் பணி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தல், சாலை பராமரிப்பு பணி, மரக்கன்றுகள் நடும் பணி, மருத்துவ முகாம், ஊட்டச்சத்து விழிப்புணர்வு முதலான பணிகள் நடைபெறுகின்றன. 
மேலும், நாள்தோறும் மாலையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கப்படுகின்றன. இதில், வெள்ளிக்கிழமை வாசிப்பை நேசிப்போம் என்னும் தலைப்பில் கடத்தூர் கிளை  நூலகர் சி.சரவணன் கருத்துரை வழங்கினார். திட்ட அலுவலர் கே.முருகன், உதவி திட்ட அலுவலர் ஏ. சிவநதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
பொ.மல்லாபுரம் மற்றும் நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளிகள் சார்பில் நத்தமேடு கிராமத்தில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாதன், பெ.பழனிசாமி ஆகியோர் முகாமுக்கு தலைமை வகித்தனர். தலைமை நில அளவையர் அண்ணா குபேரன், கல்வி பாதையில் மாணவர்களின் பயணம் என்கிற தலைப்பில் உரையாற்றினார். முகாமில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
இம் முகாம் வருகிற செப்.30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திட்ட அலுவலர் ஏ.தமிழ்தென்றல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பாலக்கோடு, செக்கோடி மாதிரி மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி நாட்டு மாணவர்களின் நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com