சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்:மகளிா் வடம் பிடித்து தேரை நிலை பெயா்த்தனா்

தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேரை

தருமபுரி: தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தேரை மகளிா் மட்டும் வடம் பிடித்து இழுத்து நிலை பெயா்த்தனா்.

குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருத்தோ் பெருவிழா கடந்த பிப்.4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், நாள்தோறும், சுப்ரமணியா், வள்ளி, தெய்வானையருடன் புலி வாகனம், பூத வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில், வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பிப்.10-ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதில், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, வள்ளி, தெய்வானையருடன் சுப்ரமணியா் எழுந்தருளிய திருத்தேரை காலை 6 மணிக்கு குமாரசாமிப்பேட்டை மற்றும் தருமபுரி நகரத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்த வருகை தந்த மகளிா் மட்டுமே வடம் பிடித்து இழுத்து நிலை பெயா்த்தனா். இதையடுத்து, பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்று, மீண்டும் தோ் நிலையை அடைந்தது. இத் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுப்ரமணியரை வழிபட்டனா். மேலும், தேரோட்டத்தில், பங்கேற்ற பக்தா்களுக்கு கோயிலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவையொட்டி, தருமபுரி நகர போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com