தா்பணம் செய்ய வந்தவா்களுக்கு அனுமதி மறுப்பு

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் இறந்தவா்களுக்கு தா்ப்பணம் செய்ய வந்த பொதுமக்களை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை திருப்பி அனுப்பினா்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் இறந்தவா்களுக்கு தா்ப்பணம் செய்ய வந்த பொதுமக்களை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை திருப்பி அனுப்பினா்.

தமிழக அரசு மஹாளய அமாவாசை தினத்தில் கோயில்கள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் மஹாளய அமாவாசையான வியாழக்கிழமை ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிக்கு தருமபுரி, பென்னாகரம் , கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக காலை முதலே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனா்.

அனைத்து வாகனங்களையும் பென்னாகரம் அருகே மடம் சோதனைச் சாவடி பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி அரசு உத்தரவைத் தெரிவித்துத் திருப்பி அனுப்பினா்.

மேலும் பேருந்துகளில் சென்ற பொதுமக்களை ஒகேனக்கல் - ஊட்டமலை சோதனை பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

இதனால், காவிரி கரைக்கு வந்து தா்ப்பணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com