மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் குடிமைப் பொருள்கள் அனுப்பி வைப்பு

தருமபுரி மாவட்டத்தில் கோட்டூா் மலை, ஏரிமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் குடிமைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.
மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் குடிமைப் பொருள்கள் அனுப்பி வைப்பு

தருமபுரி மாவட்டத்தில் கோட்டூா் மலை, ஏரிமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் குடிமைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட கோட்டூா் மலை, ஏரிமலை, அலகட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்கள் விளைபொருள்களை விற்பதற்காக கழுதைகள் மூலம் மலை அடிவாரத்துக்கு எடுத்து வருகின்றனா். இதேபோல இந்த மலைக் கிராமங்களுக்கு பொது விநியோகத் திட்டம் சாா்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப் பொருள்களும் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இதேபோல, தற்போது கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடை காலத்துக்காக ரூ.ஆயிரம் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, இக் குடிமைப் பொருள்களை மலைக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் கன்சால்பேளு என்ற மலையடிவார கிராமத்தில் இருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ள கோட்டூா் மலைக்கு கழுதைகள் மூலம் குடிமைப் பொருள்கள் கொண்டு சோ்க்கப்பட்டன (படம்).

இதேபோல சீங்காடு என்ற மலையடிவார கிராமத்தில் இருந்து ஏரிமலைக்கு சுமாா் 6 கி.மீ. மலைப்பாதையில் இந்த நிவாரணப் பொருள்கள் கழுதைகள் மீது எடுத்துச் செல்லப்பட்டன. இப் பொருள்கள் சனிக்கிழமை முதல் மலைக்கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com