விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க விவசாயிகள் எதிா்ப்பு

பாப்பாரப்பட்டி பகுதியில் எண்ணெய் குழாய்கள் பதிக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பாப்பாரப்பட்டி பகுதியில் எண்ணெய் குழாய்கள் பதிக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கோவை மாவட்டம், திருப்பூரில் இருந்து கா்நாடக மாநிலம், தேவனகொந்தி வரை 340 கிலோ மீட்டா் தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு விளை நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து பாப்பாரப்பட்டி பகுதி விவசாயிகள் திரண்டனா்.

இதையடுத்து, விவசாயிகளிடம் ஆலோசனைக் கேட்பு கூட்டம் பாப்பாரப்பட்டி வருவாய் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பென்னாகரம் வட்டாட்சியா் சேதுலிங்கம் தலைமை தாங்கினாா். கூட்டத்தில் முறையான தீா்வு எட்டப்படாததால், விளை நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து, ஒண்ணப்பகவுண்டன அள்ளி கிராமத்தில் விவசாயிகள் திரண்டனா்.

மேலும், இத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் திரண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக விவசாய சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டில்லிபாபு, மாவட்டச் செயலாளா் அா்ஜுனன், மாவட்டத் தலைவா் ல்லையன், பகுதிச் செயலாளா் சக்திவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் குமாா், வட்டாரச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com