கோயில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பு

பெத்தூரில் கோயில் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

அரூா்: பெத்தூரில் கோயில் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், பாப்பிசெட்டிப்பட்டி கிராம ஊராட்சியில் பெத்தூா் அருள்மிகு ஸ்ரீ பெருமாள் மற்றும் அருள்மிகு ஆம்பேஸ்வரா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா் வசதிக்காக மின்மோட்டாா் வசதியுடன் ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கடத்தூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா், ஒன்றியக் குழு பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். நிதியிலிருந்து கோயில் வளாகப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதேபோல், அன்னை அஞ்சும் நகரில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டாா் வசதியுடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள், வகுத்தப்பட்டி ஊராட்சி புங்கனைப் புதூரில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புப் பகுதியில் குடிநீா்க் குழாய் இணைப்புகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளன என ஒன்றியக் குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com